ஈஸ்டர் கொண்டாட்டத்தில் பங்கேற்காத கேட் மிடில்டன்
இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் கேட் மிடில்டன் ஜோடி (Prince William-Kate Middleton) ஈஸ்டர் கொண்டாட்டங்களில் பங்கேற்கவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமீபத்தில் கேட் மிடில்டனுக்கும் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதோடு அவர் தற்போது அறுவை சிகிச்சை முடிந்து குணமடைந்து வருவதாக கூறப்படுகிறது.
பிரித்தானியர்கள் கவலை
இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் (King Charles III) முதன்முறையாக வெளி உலகிற்கு வந்து ஈஸ்டர் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக வின்ட்சர் கோட்டைக்கு விஜயம் செய்துள்ளபோது கேட் மிடில்டன் விஜயம் செய்யவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
மேலும், ஈஸ்டர் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்திற்கு வந்த சார்லஸ் தம்பதியினர் பொதுமக்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகன்றது.
இதன்போது சுற்றுவட்டார மக்கள் சார்லஸ் மன்னரை நோக்கி 'தைரியமாக இருங்கள்' என கோஷமிட்டுள்ளனர்.
பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து பிரித்தானியர்கள் கவலையடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்! 19 மணி நேரம் முன்

சோழனை வீட்டிற்கு அழைத்து வந்து மோசமாக அசிங்கப்படுத்தும் நிலாவின் அப்பா.. அய்யனார் துணை புரொமோ Cineulagam
