கருணாவின் முதல் மனைவியின் பெயரில் பல ஏக்கர் காணிகள்! அதிர்ச்சித் தகவல்
மட்டக்களப்பு கிரான் தடாணை பெருளாவெளி பகுதியிலுள்ள மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் விவசாயம் செய்ய முடியாமல் ஆதங்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
9 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் ஜீவனோபாயம் கேள்விகுறியாகியுள்ளது.
அவர்களும் பல்வேறு தரப்பினருடனும் இந்த விடயம் தொடர்பில் உரையாற்றி வருகையில் இதற்கு தீர்க்கமான முடிவு கிடைக்கவில்லை.
இந்த விடயங்கள் தொடர்பில் தேடும் போது கருணா என்று அழைக்கப்படும் விநாயமூர்த்தி முரளிதரன் இந்த பகுதியில் சுமார் 100 ஏக்கர் காணிகளை கையகப்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.
இந்த நிலையில் கருணாவின் முதல் மனைவியின் பெயரின் பல ஏக்கர காணிகள் இருப்பதாக பாதிக்கப்பட்ட மூதாட்டியொருவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
மண்ணை மீட்க போராடியவர்கள் மக்களின் காணிகளை அபகரிக்கப்பது நியாயமா என்று மக்கள் கேள்வி கேட்கின்றனர்.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |