பேசுபொருளாகும் கருணாவின் நடன காணொளி! கோட்டாபயவால் மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா ) நடனமாடும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
சிங்கள பாடல் ஒன்று இசைக்கப்படும் போது அதனை பாடிக் கொண்டே களியாட்டம் போன்ற நிகழ்வு ஒன்றில் அவர் இருப்பது போன்ற காணொளியே அது.
தியாகதீபம் திலீபனின் சிலை விவகாரம் தற்போது ஈழ அரசியலில் பரபரப்பாகியுள்ள நிலையில், அவரின் இந்த காணொளி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
அதேநேரம், கொழும்பு கோட்டை நீதிமன்றில் முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கிய கருத்துக்களால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சிக்கல் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டாபய, பொதுபாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போது, இடம்பெற்ற குற்றச்சம்பவம் ஒன்று தொடர்பாக அவர் நீதிமன்றில் முன்னிலையானார். இந்நிலையில் அக்காலகட்டத்தில் மகிந்த ராஜபக்சவே ஜனாதிபதி பதவி வகித்தார்.
இது உட்பட நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,