கொழும்பில் கத்திக்குத்து தாக்குதல்! இருவர் பலி
கொழும்பு- மாளிகாவத்தையில் காதல் விவகாரம் ஒன்றின் காரணமாக ஏற்பட்ட கத்திக்குத்து சம்பவத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
யுவதியொருவர் மீது நாட்டம் கொண்ட இரு இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கத்திக்குத்து தாக்குதலில் முடிந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்றிரவு(29.09.2026) மாளிகாவத்தையில் நடைபெற்றுள்ளது.
இருவர் பலி
இதன்போது ஒரு யுவதிக்காக சண்டையிட்டுக் கொண்ட இரண்டு இளைஞர்களும் ஒருவரையொருவர் கடுமையான முறையில் கத்தியால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர்.

அவர்களை விலக்க முற்பட்ட இன்னொரு இளைஞனும் இதன்போது கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
இந்நிலையில் யுவதிக்காக மோதிக் கொண்ட இரு இளைஞர்களும் கடுமையான காயங்கள் காரணமாக சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த மற்றொரு இளைஞன் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri