காரைநகர் சுற்று வீதியை புனரமைத்து தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை
காரை நகர் சுற்று வீதியை புனரமைத்து தருமாறு முன்னாள் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தூரன் ஜனாதிபதியிடம் கோரிக்கையினை முன்வைத்தார்.
நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது மேற்படி கோரிக்கையினை ஜனாதிபதியிடம் முன்வைத்தார்.
வீதி புனரமைப்பு
கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து தங்களுடைய தலைமைத்துவத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் தியாகராஜா மகேஸ்வரன் மற்றும் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
16 கிலோமீற்றர் நீளமுள்ள காரைநகர் சுற்று வீதி நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமல் உள்ளது அவ்வீதியினை பயன்படுத்துவோர் கடும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இலங்கையில் மிகவும் மோசமாக நிலையுள்ள வீதியாக காரைநகர் வீதி காணப்படுகின்றது எனவே மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் காரைநகர் சுற்று வீதியினை உரிய வடிகால் அமைப்பு முறைகளுடன் புனரமைப்பு செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam
