கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தின் பின்னணியின் சதித்திட்டம்! தடைப்படும் முக்கிய விசாரணைகள்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா என்பதை கண்டறிய அரசாங்கப்புலனாய்வு அமைப்புகள் விசாரணையை தொடங்கியுள்ளன.
இது ஒரு கொலையா அல்லது அவரது தற்கொலைக்கு வழிவகுக்கும் வகையில் யாராவது ஒரு சூழ்நிலையை உருவாக்கினார்களா என்பதை கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அரசாங்கப்புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜோசப் விஜயாகிய நான்..! பதவியேற்பு விழாவிற்காக காத்திருக்கும் தவெகவினர் - பின்னணியில் வெடித்த புதிய குழப்பம்
சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு
கபில சந்திரசேன தனது மரணத்திற்கு முன்பு யாரையெல்லாம் சந்தித்தார், யாருடன் தொலைபேசியில் பேசினார் என்பதையும் விசாரித்து வருவதாகவும், இந்த தகவலைக் கண்டறிய தொலைபேசி பதிவுகள் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொள்ளுப்பிட்டியவில் உள்ள பெட்ரிஸ் மாவத்தையில் உள்ள அவரது வீட்டில், கபில சந்திரசேனவின் உடல், 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று தூக்கில்தொங்கிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
கபில சந்திரசேன சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததாக பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில், இது ஒரு சந்தேகத்திற்கிடமான மரணம் எனக் கருதுவதாகவும், மேலுதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
விசாரணையில் சில தடைகள்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இதற்கிடையில், கபில சந்திரசேனவின் மரணத்தால், ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான மேலதிக விசாரணையில் சில தடைகள் ஏற்படக்கூடும் என்று சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் திடீர் மரணம்! CCD பிரிவிற்கு அவசரமாக மாற்றப்பட்ட விசாரணைகள்
பரபரப்பிற்கு மத்தியில் த.வெ.க வெளியிட்ட காணொளி! பெரும்பான்மை கிடைத்தாலும் விஜய் ஆட்சி அமைப்பதில் அடுத்தடுத்து சிக்கல்
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam