கூடுதலாக ஒரு நாள் கூட சிறையில் இருக்க விரும்பாத கபில! சொந்த விருப்பில் எடுத்த முக்கிய முடிவு..
மர்மமாக உயிரிழந்துள்ள ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன, தனது சொந்த விருப்பிலேயே தரகர்களைப் பிணையாளிகளாக முன்னிறுத்த தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கபில சந்திரசேனவின் மரண விசாரணைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்குப்பதிலளிக்கும் போது கொழும்பு மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஷாந்த சொய்சா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
கபில சந்திரசேனவின் சொந்த விருப்பிலேயே இரண்டு தரகர்கள் பிணை வழங்க வந்துள்ளனர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்காக கபில சந்திரசேன ஒரு சிறைக் காவலர் மூலம் தரகர்களைத் தொடர்பு கொண்டுள்ளார்.

கூடுதலாக ஒரு நாள் கூட சிறையில் இருக்க விரும்பாததாலேயே கபில சந்திரசேன இந்த வழியில் பிணை பெற முயன்றுள்ளார்.
குற்ற நிகழ்விடத்தில் கண்டெடுக்கப்பட்ட தடயங்கள் பகுப்பாய்வுக்கு அவை அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவற்றில் ஒரு அறிக்கை தற்போது தடயவியல் மருத்துவ அதிகாரிகளால் பெறப்பட்டுள்ளது என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் நிசாந்த சொய்சா மேலும் தெரிவித்துள்ளார்.
பிக்குவின் தொலைபேசியில் அம்பலமான பல தகவல்கள்..! கிடைத்துள்ள வலுவான ஆதாரங்கள் - வெடிக்கும் புதிய சர்ச்சை..
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam