கபில சந்திரசேனவின் மரணம் இலங்கை அரசியலில் இருண்ட பக்கம் - மன அழுத்தத்தில் இருந்தாரா..!
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம், இலங்கையின் அரசியல் மற்றும் வர்த்தக கலாசாரத்தின் இருண்ட பக்கத்தைப் பிரதிபலிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
நேற்று(08.05.2026) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அதிகாரிகளின் மரணத்திற்கு பின்னால் மறைக்கப்பட்ட உண்மை
கபில சந்திரசேனவை ஸ்ரீலங்கா டெலிகொம் காலத்தில் இருந்தே தனக்குத் தெரியும் எனக் குறிப்பிட்ட திலித் ஜயவீர, அவர் ஒரு திறமையான நிர்வாக அதிகாரி. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த நாட்டின் அரசியல் மற்றும் வர்த்தகங்களுக்கு இடையிலான மறைமுகத் தொடர்புகளுக்குள் அவர் சிக்கிக்கொண்டார் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கபில சந்திரசேன போலிப் பிணையாளர்களைப் பயன்படுத்தி பிணை பெற்றுள்ளார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அவருக்குப் பெரும் மன அழுத்தத்தைக் கொடுத்திருக்கும் என்றும் திலித் ஜயவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதியில் ஒரு மனிதன் தனிமைப்படுத்தப்படும் போது, அவரிடம் இருந்து நன்மைகளைப் பெற்ற எவருமே அவருக்கு ஆதரவாக நிற்கவில்லை. பிணை எடுப்பதற்குக்கூட ஒருவரை அவரால் தேடிக்கொள்ள முடியாமல் போனது ஒரு கசப்பான பாடம்" என்றும் அவர் விசனம் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் முன்னரே, அவரை விளக்கமறியலில் வைப்பதையே தண்டனையாக மாற்றும் தற்போதைய சட்ட முறையை அவர் விமர்சித்துள்ளார்.
"குற்றம் நிரூபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகளே" என்ற தார்மீகப் பண்பு இலங்கையின் தற்போதைய அமைப்பில் வலுவிழந்து வருகின்றது.

கபில சந்திரசேனவின் மரணம் முதற்கட்டமாக தற்கொலை எனத் தெரிந்தாலும், அது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதே போன்று, அண்மையில் உயிரிழந்த திறைசேரி அதிகாரி ரங்க ராஜபக்சவின் மரணம் போன்றே, இதிலும் பல மர்மங்கள் ஒளிந்திருக்கின்றன.
அத்துடன், அரசியல் அமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணும் அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி என இதன்போது எச்சரித்துள்ளார்.
தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு: 36 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தீவிர ஆலோசனை..! தலைகீழாக மாறுமா விஜயின் நிலைமை
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri