கபில சந்திரசேனவின் திடீர் மரணம்! அரவிந்த டி சில்வாவின் வீட்டுப்பணியாளர் வழங்கிய முக்கிய சாட்சியம்

CID - Sri Lanka Police Sri Lanka Police Supreme Court of Sri Lanka Kapila Chandrasena
By Dhayani May 20, 2026 02:56 AM GMT
Report

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கபில சந்திரசேனவிற்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், கொள்ளுப்பிட்டியவில் உள்ள வீட்டில் இருந்து (08) திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

கபில சந்திரசேனவின் மரண விசாரணை! வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கமரா பதிவு தொடர்பில் வெளியான தகவல்

கபில சந்திரசேனவின் மரண விசாரணை! வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கமரா பதிவு தொடர்பில் வெளியான தகவல்

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணை

இந்நிலையில், கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை, கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் நேற்று(19) இடம்பெற்றபோது முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் வீட்டில் பணிபுரியும் பணியாளர் 10 வது சாட்சியாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கபில சந்திரசேனவின் திடீர் மரணம்! அரவிந்த டி சில்வாவின் வீட்டுப்பணியாளர் வழங்கிய முக்கிய சாட்சியம் | Kapila Chandrasena Dead Investigation

இதன்போது அவர் தனது சாட்சியத்தில்,

சாட்சி - மே 6 ஆம் திகதி, கபில சேர் சுமார் மூன்று மணிக்கு வந்து, சாப்பிட்டுவிட்டு சுமார் ஐந்து மணிக்கு கிளம்பிச்சென்றார். அவரின் பெயரை நான் பின்னர் தான் தெரிந்துகொண்டேன். அவருக்கு உணவைச்சூடாக்கி சாப்பிடவும் குடிக்கவும் கொடுத்தோம். அந்த நேரத்தில் அம்மா அங்கிருந்தார். ஐயா சுமார் ஐந்தரை மணிக்கு வந்தார். எனக்கு அவ்வளவு தான் தெரியும், பின்னர் என்ன நடந்தது என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

பொலிஸ் - 6 ஆம் திகதி கிளம்பிச்சென்ற கபில சந்திரசேன திரும்பி வந்தாரா?

சாட்சி - அவர் 7 ஆம் திகதி மதியம் சுமார் 12.30 மணிக்குத் திரும்பி வந்தார். அவர் யாருடன் வந்தார் என்பதை நான் பார்க்கவில்லை.

நான் வீட்டில் கீழ்த்தளத்தில் தரையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தேன். அவர் எங்களிடம் எதுவும் பேசவில்லை, அவர் தனியாகத்தான் வந்திருந்தார். மாலை சுமார் ஐந்து மணிக்கு அவர் என்னிடம் தேநீர் கேட்டார்.

பொலிஸ் - கபில வந்தபோது வெளியிலிருந்து யாராவது வீட்டிற்கு வந்தார்களா?

சாட்சி - வெளியாட்கள் யாரும் வரவில்லை. அம்மாவும் அவருடைய மகனும் அங்கே இருந்தார்கள். கபில சேர் முதல் மாடியில் தான் இருந்தார். அவர் இரவு உணவு எதுவும் சாப்பிடவில்லை. நாங்கள் உணவு கொண்டு சென்றோம். ஆனால் அவர் சாப்பிடவில்லை.

எங்கள் முதலாளியிடம் பேசிய பிறகு, அவர் இரவு 12:10 மணிக்கு உறங்கச் சென்றார். கடைசியாக, நான் அவருக்குக் கொஞ்சம் தேநீர் கொடுத்தேன். அப்போது சுமார் 12:15 மணி.

எனது படுக்கையறை, வாகன நிறுத்துமிடம் நுழையும் இடத்தில் உள்ளது. நான் சுமார் 12:15 மணிக்கு அங்கே உறங்கச் சென்றேன். பிறகு, நான் கழிவறைக்குச் செல்ல வேண்டியிருந்ததால், அதிகாலை சுமார் 1:30 மணிக்கு எழுந்தேன். அப்போது, ​​சமையலறைக்கு அருகிலுள்ள அறையில் விளக்குகள் எரிவதைப் பார்த்தேன்.

நான் அங்கிருந்த ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தேன். அப்போது, ​​அவர் ஒரு வெள்ளை நிற பிளாஸ்டிக் போத்தலை பிடித்தபடி நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் அப்போது கதவை திறந்து, அவருக்கு எதுவும் வேண்டுமா என்று கேட்டேன். ​​தான் தண்ணீர் எடுக்க வந்ததாக சொன்னார்,

ஆனால் அவருடைய அறையில் ஏற்கனவே தண்ணீர் இருப்பதாக நான் அவரிடம் சொன்னேன். பிறகு, பரவாயில்லை என்று சொல்லிவிட்டு, கபில சேர் அறைக்குத் திரும்பிச்சென்றார். அவர் மாடிப்படிகளில் செல்வதை நான் பார்த்தேன். அதன் பிறகு, நான் மீண்டும் விளக்கை அணைத்துவிட்டு தூங்கச்சென்றேன்.

பொலிஸ் - கபில எழுந்து தண்ணீர் குடிப்பதற்காக சமையலறைக்கு வந்து வீட்டின் கதவைத் திறந்ததை நீங்கள் பார்த்தீர்களா?

சாட்சி - இல்லை, ஏனென்றால் நாங்கள் மட்டும்தான் கதவைத் திறப்போம். வேறு யாரும் அதைத் திறப்பதில்லை. மேலும், அந்த நேரத்தில் வேறு யாரும் எழுந்திருந்ததையும் நான் பார்க்கவில்லை என்றும் சாட்சியமளித்துள்ளார்.     

இவரை கண்டால் உடன் அறிவிக்கவும் - பொதுமக்களிடம் அவசர உதவிகோரும் பொலிஸார்

இவரை கண்டால் உடன் அறிவிக்கவும் - பொதுமக்களிடம் அவசர உதவிகோரும் பொலிஸார்

அடுத்த 36 மணிநேரத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! கடல் அலைகள் உயரக்கூடும் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடுத்த 36 மணிநேரத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! கடல் அலைகள் உயரக்கூடும் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US