இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மலேசியாவில் பதுங்கியிருந்த கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய நண்பர்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலுடன் தொடர்புடைய சந்தேகநபரான தனுஷ்க கௌசல்யா எனப்படும் “ரத்மலான சைமா” உள்ளிட்ட மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை இன்று(10.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் வழங்கிய தகவலின்படி, மூன்று சந்தேகநபர்களும் இன்று மாலை சுமார் 4.28 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL315 மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர்கள்
சந்தேகநபர்களை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்காக பொலிஸ் உதவி கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட குழுவொன்று மலேசியாவுக்கு பயணம் செய்திருந்தது.

இவ்வாறு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மூன்று சந்தேகநபர்களில் ஒருவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவராகக் கருதப்படும் காஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய நண்பர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த சந்தேகநபருக்கு எதிராக சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை மற்றும் மலேசிய பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது, இந்த மூன்று சந்தேகநபர்களும் மலேசியாவில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS VIDEO
இனி நாங்கதான் நார்மல்.. எல்லாரும் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க: டோரதி சர்ச்சைக்கு கார்த்திக் சுப்புராஜ் பதில் Cineulagam
அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு! Manithan
லொட்டரியில் விழுந்த ரூ.8,700 கோடி ஜாக்பாட் - ஒரு மாதம் கழித்து பரிசை வாங்கிய வெற்றியாளர் News Lankasri