எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு
கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல முனையங்களில் எரிபொருள் விநியோகம் இன்று (29.03.2023) காலை 6 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
டுவிட்டர் பதிவொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அதில், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு பொலிஸாரும், இராணுவத்தினரும் தொடர்ந்தும் ஆதரவளிப்பார்கள். அத்துடன், நாட்டில் போதியளவு எரிபொருள் இருப்புக்கள் உள்ளது.
எரிபொருள் விலை திருத்தம்
ஏப்ரல் மாத விலை திருத்தத்தை எதிர்பார்த்து சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருளை ஆர்டர் செய்யவில்லை.
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் ஆர்டர்களை பெற்று குறைந்தபட்ச இருப்புக்களை பேணுமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Fuel distribution has commenced at Kollonnawa and Mithurajawela terminals at 6am this morning. Police & Armed forces will continue to assist them. Adequate fuel stocks are available in the country. It has been noticed that some fuel stations has not placed orders anticipating the…
— Kanchana Wijesekera (@kanchana_wij) March 29, 2023