எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சர் சற்று முன்னர் வெளியிட்ட அறிவிப்பு
எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். நாட்டில் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது மற்றும் விநியோகம் தொடரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Request the public not to panic over shortages in fuel supply. There’s adequate stocks of fuel in the country & distribution will continue. Fuel distribution that was earlier delayed due to trade union activist forcibly preventing employees from attending to their duties have…
— Kanchana Wijesekera (@kanchana_wij) March 28, 2023
முதலாம் இணைப்பு
எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் சிலோன் பெட்ரோலியம் ஸ்டோரேஜ் டெர்மினல்ஸ் லிமிடெட் (CPSTL) ஆகிய இரு நிறுவனங்களின் ஊழியர்களையும் பணிநீக்கம் செய்யுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர உத்தரவிட்டுள்ளார்.
தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
I have instructed Chairman CPC & CPSTL to take necessary disciplinary steps to consider termination of employment & any legal steps necessary against trade union activist or employees that are disrupting the distribution of fuel, disrupting the work of other employees or is…
— Kanchana Wijesekera (@kanchana_wij) March 28, 2023
இது தொடர்பாக தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்புதல் மற்றும் விநியோகம் செய்வதில் ஈடுபடுவதிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டு வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவதற்கு பெட்ரோலிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்ததன் பின்னணியில் விஜேசேகரவின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
சிபிசியை தனியார்மயமாக்கும் அரசாங்கத்தின் முடிவிற்கு எதிராக நடத்தப்பட்ட சத்தியாக்கிரகத்தை கைவிட்ட போதிலும், தொழிற்சங்க கூட்டு பின்னர் அதற்கு பதிலாக வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை (CPC) தனியார் மயமாக்க அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படும் முயற்சிகளுக்கு எதிராக நேற்று (மார்ச் 27) சத்தியாக்கிரகப் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டது.