ஹம்பாந்தோட்டை உத்தேச எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பில் 7 நிறுவனங்கள் ஆர்வம்: கஞ்சன விஜேசேகர
ஹம்பாந்தோட்டையில் உத்தேச எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ஏழு நிறுவனங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தனது டுவிட்டர் பதிவில் இன்றைய தினம் (28.03.2023) தகவல் வெளியிட்டுள்ளார்.
மிரிஜ்ஜவிலவில் அமைக்கப்படவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பான காலக்கெடு நேற்று (27.03.2023) நிறைவடைந்துள்ளது.
விண்ணப்ப மதிப்பீடு
இதற்கமைய, தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் பிற கொள்முதல் குழுக்கள் இந்த விண்ணப்பங்களை மதிப்பீடு செய்து பொருத்தமான விண்ணப்பதாரர்களுக்கு முன்மொழிவுகளுக்கான கோரிக்கையை வழங்கும் என்று அவர் மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 companies have submitted EOIs for the proposed New Refinery in Hambantota by the deadline yesterday. The technical evaluation committee & other procurement committees will evaluate EOIs and issue the RFPs to suitable applicants. pic.twitter.com/vOeNuHmNEO
— Kanchana Wijesekera (@kanchana_wij) March 28, 2023