இலங்கையில் மீண்டும் ஆரம்பமானது எரிபொருள் வரிசை
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (28) பிற்பகல் முதல் நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டுள்ளன.
இதேவேளை, கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் கையிருப்பு
தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வராவிட்டால், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சிக்கல் ஏற்படலாம் என இரவோடு இரவாக, பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் குவிந்துள்ளமை காணக்கூடியதாகவுள்ளது.
இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போது எரிபொருள் கையிருப்பு இல்லை எனவும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.