மனோ கணேசனுக்கு மன உளைச்சல் : கணபதி கனகராஜ் சாடல்

Mano Ganeshan Sri Lanka Politician Jeevan Thondaman
By Thirumal Feb 22, 2024 02:05 PM GMT
Report

நீண்ட நாட்களாக இழுபறியிலிருந்த இந்திய அரசின் நிதி உதவியோடு மலையகத்தில் அமைக்கப்பட இருக்கின்ற வீட்டுத்திட்டம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,"இந்திய அரசாங்கம் மலையகப் பகுதியில் பல்வேறு வகையான அபிவிருத்தி வேலை திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.மலையக மக்களின் வாழ்வாதார கல்வி, குடியிருப்பு, பொருளாதார மேம்பாட்டு வேலை திட்டங்கள் இதில் உள்ளடங்கும்.

ஆனால் இத்திட்டங்களை பயன்படுத்தி அதை அரசியலாக்கி அதில் லாபம் தேடி சுவை கண்டவர்களுக்கு தமது அரசியல் எதிர்காலம் குறித்து கிளி கொள்ளச் செய்துள்ளது. இதனாலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தடுமாற்றத்துக்கு உள்ளாகி உள்ளார்.

வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மோடியின் மலையக விஜயம்

நல்லாட்சி காலத்துக்கு முன்பே மலையக மக்களுக்கு வீடமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என்ற கொள்கை ரீதியான முடிவை இந்திய மத்திய அரசு எடுத்திருந்தது. அதற்கான பூர்வாங்க வேலைகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செய்திருந்தது.

மனோ கணேசனுக்கு மன உளைச்சல் : கணபதி கனகராஜ் சாடல் | Kanapathi Has Blamed Mano Ganeshan

அதன் அடிப்படையிலேயே நான்காயிரம் வீடுகளை முதற்கட்டமாக வழங்குவதற்கு இந்திய அரசு முடிவெடுத்து அதை அமல்படுத்தியது. அதன் தொடர்ச்சியாகவே பத்தாயிரம் வீட்டு திட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மலையக விஜயத்தின் போது அறிவித்தார்.

இதன்போது மலையக மக்களின் குடியிருப்பு தேவை கருதி இந்திய அரசால் நன்கொடையாக வீட்டுத் திட்டம் வழங்கப்படுகின்றது என்று கூறினாரே தவிர எந்த ஒரு அரசியல் கட்சியின் கோரிக்கையையும் ஏற்று வழங்குவதாக தெரிவிக்கவில்லை.

எனினும், இந்திய வீடமைப்புத் திட்டத்தின் பிதாமகனாக மனோ கணேசன் தன்னை காட்டிக்கொள்ள முற்படுகின்றார். வெளிநாட்டு நன்கொடைகள் கிடைக்கின்ற போது நாட்டில் நடைமுறையில் இருக்கின்ற அரசாங்க அமைச்சர்கள் அதை அமுல்படுத்துவார்கள். இதுதான் பொதுவான நடைமுறையாகும்.

பொது வேட்பாளராக ரணிலை களமிறக்க வியூகம் : அனைத்துக் கட்சிகளுக்கும் வலைவீச்சு

பொது வேட்பாளராக ரணிலை களமிறக்க வியூகம் : அனைத்துக் கட்சிகளுக்கும் வலைவீச்சு

13ஆவது அரசியல் சீர்திருத்தம் 

இதில் மக்களுக்கு நன்மைகள் சென்றடைய வேண்டும் என்பதே பிரதானமாகும். நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிரணியிலுள்ள அரசியல்வாதிகளை விமர்சனம் செய்து அரசியல் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோட்பாட்டை கடைபிடித்து வருகிறது.

மனோ கணேசனுக்கு மன உளைச்சல் : கணபதி கனகராஜ் சாடல் | Kanapathi Has Blamed Mano Ganeshan

நாம் அமைதியாக இருக்கின்றோம் என்பதற்காக எமது நடவடிக்கைகளை கொச்சைப்படுத்தி அரசியல் செய்வதற்கு முற்பட்டால் எமக்கும் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இலங்கையில் புரையோடிப் போயிருந்த இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்திய அரசாங்கத்தின் கடுமையான முயற்சியின் காரணமாக 13ஆவது அரசியல் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

நல்லாட்சி காலத்தின் போது தேர்தல் தோல்விக்கு பயந்து மாகாணம் சபை தேர்தல் முறையை மாற்றுவதாக கூறி மாகாண சபை தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இதில் பிரதான பங்கு வகித்தவர் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன். மாகாண சபை தேர்தல் முறையே இல்லாமல் செய்து விட்டு இன்று சிறுபான்மை மக்களின் ரட்சகர் போல் நடந்து கொள்வது வேடிக்கையாக இருக்கிறது.

 

இலங்கையில் நீர் பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இலங்கையில் நீர் பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

சம்பள உயர்வு

அதேபோல தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக் கொடுப்பதாக மார்தட்டிக் கொண்டு 50 ரூபாய் சம்பளம் அதிகரிப்பை கூட பெற்றுக் கொண்டிருக்க முடியாத கையாலாகாத தனத்தை மலையக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

மனோ கணேசனுக்கு மன உளைச்சல் : கணபதி கனகராஜ் சாடல் | Kanapathi Has Blamed Mano Ganeshan

தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மலையகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான இளைஞர்களை அழைத்து ஆசிரியர் நியமனத்தை பெற்றுக் கொடுப்பதாக கூறி போலியான நியமனக் கடிதங்களை வழங்கிவிட்டு தேர்தல் முடிந்தவுடன் அவர்களை நடுவீதிக்கு கொண்டு வந்து விட்டதையும் இங்கு நாம் சுட்டிக் காட்ட வேண்டி இருக்கிறது.

இவ்வாறான மக்கள் விரோத செயற்பாடுகளில் இலங்கை தொழிலாளர்கள் காங்கிரஸ் எப்போதும் ஈடுபட்டது கிடையாது. தேர்தல் வெற்றியை விட சமூக மேம்பாடு இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு மேலானது என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் நிரூபித்து காட்டி இருக்கிறோம். நல்லாட்சி காலத்துக்கு முன்பே இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமையில் பல்வேறு வீடமைப்பு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.அதில் எவ்விதக் கட்சி பாகுபாடும் இருக்கவில்லை.

கற்றல் செயற்பாடுகளை புறக்கணிக்கும் யாழ். பல்கலையின் விஞ்ஞான பீட மாணவர்கள்

கற்றல் செயற்பாடுகளை புறக்கணிக்கும் யாழ். பல்கலையின் விஞ்ஞான பீட மாணவர்கள்

கட்சி ரீதியாக வீடமைப்பு திட்டம் 

ஆனால் நல்லாட்சி காலத்திலேயே முதல் முதலாக கட்சி ரீதியாக வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. அன்று கட்சி ரீதியாக புறக்கணிக்கப்பட்டவர்கள் இன்று வீடுகள் கேட்கிறார்கள். அவர்களுக்கு வீடுகள் வழங்குவது நியாயமானதாகும்.

மனோ கணேசனுக்கு மன உளைச்சல் : கணபதி கனகராஜ் சாடல் | Kanapathi Has Blamed Mano Ganeshan

மலையக மக்கள் எந்த தொழிற்சங்கத்தில், அரசியல் கட்சியில் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. அவர்களில் வீட்டுத் தேவை யாருக்கு இருக்கிறது என்பதே முக்கியமானதாகும். அவற்றை நிறைவேற்றுவது தற்போதைய அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் கடமையும் ஆகும்.

எம்மைப் பொறுத்த வரையிலே எல்லா விடயங்களுக்கும் கட்சி கலாச்சாரத்தை கொண்டு வருவதற்கு இடமளிக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இந்த நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை இந்திய வம்சாவளி மக்கள் ஒற்றுமையாக இருந்து தமது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசியல் காப்புணர்ச்சிக்கு அப்பால் ஒன்றிணைந்து செயல்படுமாறு மனோ கணேசனுக்கு அழைப்பு விடுக்கிறோம்." என தெரிவித்துள்ளார். 

கரைச்சி பிரதேச சபையின் பொறுப்பற்ற செயற்பாடு: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

கரைச்சி பிரதேச சபையின் பொறுப்பற்ற செயற்பாடு: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US