கம்மன்பில உள்ளிட்டோரின் வழக்கில் நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்ட இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் எழுத்துமூல ஆட்சேபனைகளை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியருக்கு சொந்தமான 21 மில்லியன் ரூபா பெறுமதியான நிறுவனப்பங்குகளை போலியான அதிகாரத்தை முன்வைத்து முறைகேடாகப் பயன்படுத்தியதாக உதய கம்மன்பில உள்ளிட்ட இரண்டு பிரதிவாதிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எழுத்துப்பூர்வ ஆட்சேபனைகள்
இந்நிலையில், இன்று குறித்த வழக்கு விசாரணையில் பிரதிவாதி உதய கம்மன்பில நீதிமன்றத்தில் முன்னிலையாகியதுடன், மற்றைய பிரதிவாதியான சிட்னி ஜயரத்ன உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
அத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை பரிசீலித்த நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பான எழுத்துப்பூர்வ ஆட்சேபனைகளை நவம்பர் 25ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது.
அதேவேளை 1996ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் 1997ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த குற்றத்தை செய்ததாக உதய கம்மன்பில உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 10 மணி நேரம் முன்

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan
