15 ஆண்டுகளுக்கு முன்பே கமலா ஹாரிஸ் ஜனாதிபதி : பேசு பொருளாகியுள்ள பிரபல நடிகையின் பதிவு
பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் 2009இல் கமலா ஹாரிஸ் குறித்து வெளியிட்ட பதிவு தற்போது பேசுப்பொருளாகி வருகின்றது.
அமெரிக்காவில் ஆளும் ஜனாதிபதி கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் (Kamala Harris) நவம்பரில் நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
இதற்காக அவர் தற்போது தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நிதி திரட்டும் நிகழ்ச்சி
இந்த நிலையில் தசாவதாரம், ஒஸ்தி படங்களில் நடித்த இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் (47) 2009ஆம் ஆண்டில் வெளியிட்ட பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
குறித்த நடிகை தனது எக்ஸ் பதிவில், "ஒருநாள் அமெரிக்காவின் ஜனாதிபதியாகும் வாய்ப்பை கொண்டவர் என்று சிலரால் கூறப்படும் கமலா ஹாரிஸ் என்ற பெண்ணுடன், ஆடம்பரமான ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் மல்லிகா ஷெராவத் ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸை ஒருமுறை சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக, 2011ஆம் ஆண்டில் வெளியான Politics of Love (அல்லது Love Barack) எனும் படத்தில் ஒபாமாவின் பிரசார ஊழியராக மல்லிகா ஷெராவத் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam