ஹமாஸ் அமைப்பின் சுரங்கப்பாதையில் பிரித்தானியரின் சடலம் மீட்பு
ஹமாஸ் படைகளின் சுரங்கப்பாதையில், துப்பாக்கி குண்டு காயங்களுடன் பிரித்தானியர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பிரித்தானியருடன் மேலும் ஐந்து இஸ்ரேலிய பணயக்கைதிகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
அனைவரும் காசா பகுதியில் வைத்து படுகொலை செய்யப்படிருக்கலாம் என்றே முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவம்
நிலப்பரப்பில் இருந்து 30 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் இருந்து இஸ்ரேலிய படைகள் அந்த சடலங்களை மீட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை ஹமாஸ் சுரங்கப்பாதைக்குள் அதிரடியாக நுழைந்த இஸ்ரேலிய இராணுவம், சடலங்களுடன் ஹமாஸ் படைகளின் ஆயுதக் குவியலையும் மீட்டுள்ளது.
51 வயதான பிரித்தானியர் Nadav Popplewell கடந்த ஒக்டோபர் மாதம் நடந்த தாக்குதலில் ஹமாஸ் படைகளால் கைது செய்யப்பட்டார். இவரது சகோதரி பல மாதங்களாக இவரின் விடுதலைக்காக போராடி வந்துள்ளார்.
மேலும், நவம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்ட போர் நிறுத்த நடவடிக்கையின் போது 79 வயதான இவரது தாயார் விடுவிக்கப்பட்டதோாடு, இன்னொரு சகோதரர் ஒக்டோபர் தாக்குதலின் போது கொல்லப்பட்டார்.
இந்நிலையில் தரவுகளின் அடிப்படையில், தற்போது 109 பேர் ஹமாஸ் பிடியில் உள்ளனர். இருப்பினும் ஆய்வாளர்கள் தரப்பு தெரிவிக்கையில், வெறும் 50 பேர் மட்டுமே தற்போது உயிருடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 15 மணி நேரம் முன்

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam
