களுத்துறை சிறைச்சாலையில் மோதல் - முக்கிய சந்தேகநபரான கைதி உடனடியாக மாற்றம்
களுத்துறை சிறைச்சாலையில் கைதிகளின் கடுமையான தாக்குதலுக்கு இலக்கான காவலர் ஒருவர் கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
களுத்துறை சிறைச்சாலையில் 'பி' சிறைக்ககூடத்தில் பணியாற்றி வந்த குறித்த சிறைக்காவலர், போதைப்பொருள் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளின் பேரில் 'டி' வார்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கைதியொருவர் பீ சிறைக்ககூடத்திற்கு வருகை தரமுயன்றபோது அது குறித்து விசாரித்ததுடன், அவரை தடுக்க முயன்றுள்ளார்.
கொடூரமாக தாக்குதல்
இதன்போது ஆத்திரமடைந்த கைதி, சிறைக்காவலரின் சட்டையை பிடித்து தாக்கியுள்ளார். இதனையடுத்து அவருடன் இருந்த மற்ற கைதிகளும் காவலரைக் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

கடுமையான தாக்ககுதுலுக்கு இலக்கான சிறைக்காவலர், கடுமையான காயங்களுடன் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலை வட்டாரங்களின்படி, பிரபல நிழல் உலகக் கும்பல் தலைவனான 'போம்புவல நவீன்' என்பவரின் ஆதரவாளர்கள் குழுவால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட முக்கிய சந்தேகநபரான கைதியை உடனடியாக வாரியபொல சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.