ஹொரணை முதியோர் இல்ல தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஹொரணை - அங்குருவாத்தோட பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது.
தீக்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
உரிமையாளர் கைது
அத்துடன், விபத்தில் படுகாயமடைந்த மேலும் ஐவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
70இற்கும் மேற்பட்டோர் தங்கியிருந்த குறித்த முதியோர் இல்லத்தில், கடந்த 3ஆம் திகதி மாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிலர் கட்டிடத்திற்குள்ளேயே வைத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

மேலும், பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி ஓரிருவர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், குறித்த முதியோர் இல்லத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.