திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் டொலர் மோசடி குறித்த அறிக்கை நாடாளுமன்றக்குழுவிடம் சமர்ப்பிப்பு
அவுஸ்திரேலிய நிறுவனமொன்றுக்குச் செலுத்தப்படவேண்டிய 2.5மில்லியன் டொலர்களை வேறுதரப்பொன்று மோசடியாக அபகரித்த சம்பவம் தொடர்பான அறிக்கை நாடாளுமன்றக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை, பொது நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழு, நேற்ற(04.06.2026) கூடியபோது, இந்த அறிக்கை அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டதாக குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அறிக்கையை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப
மேலும், அடுத்த வாரம் இந்த அறிக்கை ஆய்வு செய்யப்பட்டு, நிதியமைச்சின் செயலாளருடன் விவாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொது நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவின் வீட்டிற்கு தனிப்பட்ட முறையில் திறைசேரி செயலாளர் குறித்த அறிக்கையை அனுப்பியபோது, அவர் அதை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியிருந்தார்.
அறிக்கையை தனது வீட்டிற்கு அனுப்ப வேண்டாம் என்றும், அது நாடாளுமன்றத்திற்கே அனுப்பப்பட வேண்டும் என்றும் கூறி, அவர் அந்த அறிக்கையை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.