விரைவில் அதிகரிக்கப்படவுள்ள முக்கிய கட்டணங்கள்! தொழிற்சங்கப்பிரமுகர் விடுத்துள்ள எச்சரிக்கை
வீட்டு உபயோக எரிபொருள், குடிநீர்,மின்சார கட்டணங்கள் விரைவில் அதிகரிக்கும் என்று தொழிற்சங்கப் பிரமுகர் ஆனந்த பாலித எச்சரித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது, ஐக்கிய எரிபொருள் மற்றும் பொதுஊழியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித மேற்குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
குடிநீர் கட்டணங்கள் திருத்தம்
வீட்டு உபயோக லிட்ரோ கேஸ், குடிநீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்களின் விலைகள் வரும் மாதங்களில் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த வார இறுதிக்குள் ஒரு லாஃப்ஸ் அல்லது லிட்ரோ கேஸ் சிலிண்டரின் விலை 300- ரூபாவுக்கும் கூடுதலாக அதிகரிக்கக்கூடும்.
ஜூன் 15-ஆம் திகதிக்குள் குடிநீர்க் கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.