களுத்துறை இரட்டைக்கொலை விவகாரம்! பிரதான சந்தேகநபர் கைது
களுத்துறை, நாகொடையில் உணவக உரிமையாளரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொன்ற முக்கிய சந்தேகநபரை களுத்துறை குற்றத்தடுப்புப்பிரிவு கைது செய்துள்ளது.
சந்தேகநபர் கடுவெல, ரணாலையில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த போது குற்றத்தடுப்புப்பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் மற்றும் சிசிடிவி காட்சிகள்
கடந்த 9ஆம் திகதி காலை நாகொடை உணவகத்திற்கு முன்பாக நடந்த துப்பாக்கிச்சூட்டில் 54 வயதான உணவக உரிமையாளர் உயிரிழந்த நிலையில், அவரது மனைவியும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றிருந்தனர்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் குற்றம் தொடர்பான தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய சந்தேகநபர் கடுவெல பகுதியில் தங்கியிருப்பது களுத்துறை குற்றத் தடுப்புப்பிரிவினரால் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட சந்தேகநபர் கடுவெல, ரணாலையில் களுத்துறை குற்றத் தடுப்புப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் பதுங்கியிருந்த சந்தேகநபர்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலை சேர்ந்த திப்பிட்டிகொட சக்தி என்பவரின் உறவினர் வீட்டில் சந்தேகநபர் பதுங்கியிருந்தது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பதுளையைச் சேர்ந்த 32 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை நவீனின் வேண்டுகோளின் பேரிலேயே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த கொலைக்காக மற்றொரு நபர் அவருக்கு T56 ரக துப்பாக்கியைக் கொடுத்ததாகவும், கொலைக்குப் பிறகு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள தொடங்கொட சந்தி அருகே அந்தத் துப்பாக்கி மற்றொரு நபரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதற்கமைய, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளனர்.
பாக்ஸ் ஆபிஸ்: தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஜெயிலர் 2.. 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் Cineulagam
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri
வெளிநாட்டில் இருக்கேன், சொல்லாம போறீங்களே அப்பா.. செஃப் தாமு மறைவால் கண்ணீர் விட்டு கதறும் புகழ் Cineulagam