கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிர்வாக அடக்குமுறைகளை எதிர்த்து போராட்டம்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் இரண்டாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முன்பாக நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டமானது, இன்றையதினமும் (26.03.2024) தொடர்கின்றது.
உதவி அரசாங்க அதிபர் பிரிவாக செயல்பட்டு வந்த மேற்குறித்த பிரதேச செயலகம் 1988இல் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
நிர்வாக அடக்குமுறைகள்
அதனைத் தொடர்ந்து, 1993ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக மக்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்போராட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாக நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மற்றும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் ஆகியோர் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - குமார் மற்றும் நிலவன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |