தமிழ் மக்களின் தேவை என்ன என்பதை ஜே.வி.பி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்: சிறீ ரங்கேஸ்வரன் வலியுறுத்து
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தேவை என்ன என்பதை ஜே.வி.பி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளரும், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை சிறீ ரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் இன்று(12.12.2023) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,
13ஆவது திருத்தம்
“தமிழரின் அரசியல் தீர்வுக்காக ஜே.வி.பி உட்பட தென்னிலங்கை பெரும்பான்மை கட்சிகளிடம் 13 ஆவது திருத்தத்திற்கு நாம் ஆதரவை கோரி இருக்கின்றோம்.
இதேநேரம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் 13ஆவது திருத்தம் தொடர்பில் ஜே.வி.பி தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் எனவும் நாம் அவர்களிடம் நேசமாக கேட்கின்றோம்.
மாறி மாறி வருகின்ற ஆட்சிகளில் தென்னிலங்கையில் எதிர்ப்புகளும் காட்டப்படுகின்றன. தற்போது அரசு 13ஆவது திருத்தம் தொடர்பாபக அவ்வப்போது தனது நிலைப்பாட்டை கூறிவருகின்றது.
எனவே இதில் ஜே.வி.பியின் நிலைப்பபடு என்ன என்பதை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும்.
சிறீ க்கு எதிர்ப்பு
கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் இலங்கையை சூழவுள்ள சிறிய தீவுகளை ஒன்றிணைத்து சிறு தீவுகள் அதிகார சபை ஒன்றை உருவாக்கும் திட்டத்தை நாமும் நிராகரித்திருந்தோம். அந்த எதிர்ப்புகள் வெளியானதை அடுத்து அத்திட்டம் கைவிடப்பட்டது.
ஆயினும் கைவிடப்பட்ட அந்த விடயத்தை உள்நோக்கத்தின் அடிப்படையில் சிலர் ஞாபகப்படுத்தி அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர்.
அவ்வாறு ஒரு திட்டம் தற்போது இல்லை. எவ்வாறு சிங்கள “சிறீ ” க்கு எதிர்ப்பு காட்டப்பட்டபோது அதனை அரசாங்கம் மௌனமாக நீக்கியது போன்று இந்த விடயமும் கைவிடப்பட்ட நிலையிலேயே இருக்கின்றது.
ஆனால் இத்திட்டம இரகசியமாக முன்னெடுக்கப்படுவதாக சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ள சூழலிலும் அவ்வாறான ஒரு திட்டம் அரசிடம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலக தமிழர் பேரவை
உலக தமிழர் பேரவையின் வருகை போலி தேசியம் பேசுகின்ற சில குழுக்களுக்கு தடையாக இருக்கலாம். ஆனால் எம்மைப் பொறுத்தவரை புலம்பெயர் அமைப்புகள் யாரும் வரலாம் அவர்களை வரவேற்க நாம் தயாராகவே இருக்கின்றோம்.
தற்போது வந்துள்ள உலக தமிழர் பேரவை இதே இமாலய திட்ட செயற்பாட்டை கடந்த காலங்களில் முயற்சித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
நாம் வெளிப்படையாக யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்திலும் யுத்தத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு இரு தரப்புக்கும் கோரிக்கை விடுத்திருந்தோம்.
அப்போது இந்த பேரவை என்ன செய்தார்கள் என்பதையும் இவர்கள் சுயவிமர்சனம் செய்ய வேண்டும். இன்று வந்தவர்கள் இதே செயற்பாட்டுடன் கடந்த காலங்களில் பங்காற்ற முயற்சித்திருந்தால் யுத்த அழிவை தடுத்திருக்க அழுத்தத்தையாவது கொடுத்திருக்கலாம்" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
