அரகலயவில் தீக்கிரையாக்கப்பட்ட வீடுகள்: ஜே.வி.பியை கைகாட்டும் மகிந்தவின் சகா!
அரகலயவின் விவகாரத்தில் இழப்பீட்டுத் தொகையை பட்டியலிடுவதை போன்று தீ வைத்தவர்களின் விபரத்தை அரசாங்கத்தால் பட்டியலிட முடியுமா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அரகலயவின் போது அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதற்கு மக்கள் விடுதலை முன்னணி பொறுப்புக் கூற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசாங்கம் தனது இயலாமையை மறைத்துக் கொள்ள ஒன்று குரங்குகள் மீது பழி போடுகிறது.
கடந்த கால அரசாங்கம்
அல்லது கடந்த கால அரசாங்கம் தொடர்பான அறிக்கை, பட்டியலை வெளியிடுகிறது. ஆனால் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை.
அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த வாரம் மே 09 கலவரத்தில் பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகள் பெற்றுக் கொண்ட இழப்பீட்டுத் தொகையை சிரித்துக் கொண்டே பட்டியலிட்டார்.
ஆனால் அவர் ஒருசில விடயங்களை மூடி மறைத்துள்ளார். போராட்டத்தின் போது எனது வீடு உட்பட 14 கட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
எனக்கு எவ்வாறான அடிப்படையில் அந்த தொகை கிடைக்கப் பெற்றது என்பதை அமைச்சரவை பேச்சாளர் நாட்டு மக்களுக்கு அறிவிக்கவில்லை.
அரசியல்வாதிகளின் வீடு
இவர்கள் தேர்தல் காலத்திலும் மக்கள் மத்தியில் வெறுப்பினை விதைத்தார்கள். ஆட்சிக்கு வந்த பின்னரும் வெறுப்பையே விதைக்கிறார்கள்.
2022 மே 09 கலவரத்தின் போது அரசியல்வாதிகளின் வீடு தீ வைக்கப்பட்டமைக்கு மக்கள் விடுதலை முன்னணியினர் பொறுப்புக் கூற வேண்டும். இந்த சம்பவத்துடனான வழக்கில் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
மே 09 சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசாரணை ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Super Singer: பாதியில் பாடலை நிறுத்திய சிறுமி.... அதிருப்தியில் அரங்கம்! நடுவர்களின் முடிவு என்ன? Manithan

எதிர்நீச்சல் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்த இன்னொரு பிரபலம்.. யார் பாருங்க, இனி தெறிக்க போகுது Cineulagam
