அதிகமாக பணம் வைத்திருக்கும் அநுர தரப்பு! மக்களுக்கு நிவாரணம் இல்லை
பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜேவிபி ஒரு சதம் கூட செலவு செய்யவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
பேரிடரில் பெரும் அனர்த்தங்களை சந்தித்த மக்களுக்கு இந்த ஜேவிபி கட்சி எந்த ஒரு நிவாரணத்தையும் வழங்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
உதவி செய்ய தவறியுள்ளது..
இலங்கையில் மிகப்பெரிய கட்சி நிதியத்தைக் கொண்ட கட்சியான ஜே.வி.பி கட்சி இந்த புயல், மண் சரிவு, வெள்ள பாதிப்பினால் அனர்த்தங்களை எதிர் நோக்கிய மக்களுக்கு எந்தவித உதவியையும் செய்யத் தவறியுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அவ்வாறு செய்திருந்தால் அதனை நிரூபிக்குமாறு சவால் விடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஊடகங்களில் வந்து 25,000 ரூபா, 50,000 ரூபா தருகிறோம் என வீர வசனம் பேசுகின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அனைத்து பணமும் மக்களின் வரிப்பணம் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மாறாக அவர்களின் கட்சி நிதியிலிருந்து ஒரு சதமும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தகர்கள் வெளிநாடுகள் என பல்வேறு தரப்பினரும் இந்த நிவாரணத்திற்காக பணம் வழங்கிய வருகின்ற போதிலும் ஜே.வி.பி கட்சி வழங்கவில்லை என தெரிவித்துள்ளார்.