மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் உறுப்பினர் நீரில் மூழ்கி பலி
களுத்துறை, மீகதென்ன - வல்லாவிட உள்ளூராட்சி சபையில் மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பிரதேசத்தில் உள்ள கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெலிபன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் வலல்லாவிட்ட, போபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 70 வயதுடைய ஐ.ஏ.வீரசிறி என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
இந்நிலையில், உயிரிழந்தவர் வெலிப்பன்ன, ஊராகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு சென்றிருந்த போதே அவர் காணாமல் போனமை தொடர்பில், நேற்று முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்தவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது அருகில் உள்ள கால்வாயில் இருந்து சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 15 மணி நேரம் முன்

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..முதலிடத்தில் யார்? News Lankasri

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri
