செம்மணி அகழ்வு - போதியளவு ஆய்வுக்கூட வசதிகளின்றி போராடும் அரசு..!

University of Jaffna Sri Lanka Harshana Nanayakkara chemmani mass graves jaffna
By Rakesh Jun 22, 2026 11:31 AM GMT
Report

எமது நாட்டில் மனிதப்புதை குழியில் ஆய்வு செய்வதற்குரிய சரியான தொல்லியல் நிபுணர்களும், மனிதவியல் துறை மற்றும் உளவியல் துறைகளில் ஆலோசனை வழங்குபவர்களும் இல்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம்(20.06.2026) யாழில் நடைபெற்ற நீதி அமைச்சர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிக்குமிடையிலான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சலேயின் கணினிக்குள் மறைந்துள்ள மர்மம் என்ன...! உண்மையை அம்பலப்படுத்திய ஆளும் தரப்பு

சலேயின் கணினிக்குள் மறைந்துள்ள மர்மம் என்ன...! உண்மையை அம்பலப்படுத்திய ஆளும் தரப்பு

செம்மணி மனிதப் புதைகுழி

இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி ர.சுரேந்திரகுமார் கருத்து தெரிவிக்கையில், 

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடம் இணைந்து செயற்பட்டு வருகின்றது.

தற்போது செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்ந்து எடுக்கப்படும் என்புத் தொகுதிகள் மருத்துவ பீடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

அவற்றை அடையாளம் காணும் நோக்கில் ஒரு மனிதவியல் ஆய்வகத்தையும், மரபணு,(டி.என்.ஏ.) ஆய்வகத்தையும் உருவாக்க முயற்சி செய்து வருகின்றோம்.

செம்மணி அகழ்வு - போதியளவு ஆய்வுக்கூட வசதிகளின்றி போராடும் அரசு..! | Justice Minister Admits Lack Of Grave Expertise

எங்களுடைய முயற்சியின் மூலம் ஆய்வுகூடத்திற்குத் தேவையான சில இயந்திரங்களை பெற்றுள்ளோம். ஆனால் ஆய்வுகூடத்தை முழுமையாக அமைக்க இன்னும் கூடுதல் உதவி தேவைப்படுகின்றது.

எனவே, நீதி அமைச்சரும் காணாமல் போனோருக்கான அலுவலகமும் எங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும்.

ஏனெனில், போதுமான வசதிகள் இல்லாமல் இத்தனை தரவுகளைப் பராமரிப்பதும், பகுப்பாய்வு செய்வதும், சரியான முறையில் வகைப்படுத்துவதும், அடையாளம் காண்பதற்கான உதவிகளை வழங்குவதும் மிகவும் கடினமாக உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

கேகாலையில் பேருந்து விபத்து ஒருவர் பலி! 10 பேர் படுகாயம்

கேகாலையில் பேருந்து விபத்து ஒருவர் பலி! 10 பேர் படுகாயம்

புதைகுழி ஆய்வு நிபுணத்துவம் 

இதற்கு நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார பதிலளிக்கையில்,

நாங்கள் ஓர் உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். எமது நாட்டில் மனிதவியல் துறை, உளவியல் ஆலோசனை ஆகியவற்றில் போதிய நிபுணத்துவம் இல்லை.

காணாமல்போனோருக்கான அலுவலகமும் மற்றும் இழப்பீட்டு அலுவலகமும் இணைந்து மரபணு (டி.என்.ஏ.) பரிசோதனைகளை மேற்கொள்வதற்குரிய ஆய்வுகூடங்களை நிறுவுவதற்கும் அதனை மேம்படுத்துவதற்குரிய செயற்றிட்டங்களுக்கான முன்மொழிவுகளைச் செய்து வருகின்றோம்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திடமும் ஏதேனும் முன்மொழிவுகளை வைத்திருந்தால் அதனை நீங்கள் காணாமல் போனோருக்கான அலுவலகத்திடம் கொடுக்கலாம்.

செம்மணி அகழ்வு - போதியளவு ஆய்வுக்கூட வசதிகளின்றி போராடும் அரசு..! | Justice Minister Admits Lack Of Grave Expertise

உங்களுடைய முன்மொழிவுகளுக்கு நிதி உதவிகள் வழங்குவதற்கு பல நன்கொடையாளர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் மூலம் உதவுவோம்.

மனிதப் புதைகுழியில் ஆய்வு செய்வதற்குரிய சரியான தொல்லியல் நிபுணர்கள் போதியளவில் இல்லை. எனவே நிபுணர்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளை வழங்க வேண்டும்.

இங்கு இருக்கக்கூடிய பரிசோதனைக் கூடங்களையும் மேம்படுத்த வேண்டும். அரசாங்கப் பகுப்பாய்வு ஆய்வுகூடங்களினுடைய வளங்களை மேம்படுத்த வேண்டும்.

அதற்குரிய நடவடிக்கைகளை கட்டாயமாக எடுக்க வேண்டும். எதிர்காலத் திட்டமிடல்களின் போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துடன் நாங்கள் இணைந்து மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.

நாட்டைச் சூழவுள்ள பல கடற்பரப்புகளுக்கு அம்பர் நிற எச்சரிக்கை

நாட்டைச் சூழவுள்ள பல கடற்பரப்புகளுக்கு அம்பர் நிற எச்சரிக்கை

மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
33ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US