அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு!
'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜூன் மாதத்திற்குரிய கொடுப்பனவுகளை வழங்கும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அஸ்வெசும கொடுப்பனவை நாளை (18) வழங்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, 1,373,248 பயனாளி குடும்பங்களுக்காக 10,904,801,250.00 ரூபாய் பணம் நாளை சம்பந்தப்பட்ட பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வைப்புச் செய்யப்படவுள்ளது.
அஸ்வெசும கொடுப்பனவு
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமல் கொடவலகெதர, இந்தக் கொடுப்பனவு நடவடிக்கைகள் 'அஸ்வெசும' முதற்கட்ட பயனாளிகளுக்காக மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, நாளை முதல் சம்பந்தப்பட்ட பயனாளிகள் தங்களது 'அஸ்வெசும' வங்கி கணக்குகள் ஊடாக இந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam