திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான உத்தரவை அறிவிப்பதை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாத்தினால் இன்று(30.01.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனினும், இந்த வழக்குத் தொடர்பான உத்தரவு தயாராக இல்லை என மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதியரசர் அறிவித்துள்ளார்.
இதற்கமைய, இந்த உத்தரவு எதிர்வரும் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதியரசர் ஒத்திவைத்துள்ளார்.
அத்துடன், அதற்கு முன்னதாக இந்த உத்தரவைத் தயார் செய்ய முடியுமாயின் எதிர்வரும் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும், அவ்வாறு நிகழுமாயின் அது குறித்து தரப்பினருக்கு அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam