தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு எதிரான விசாரணையில் இருந்து விலகிய நீதியரசர்கள்!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் பொறுப்புக்களை வெளியிட தகவல் அறியும் உரிமை ஆணையக உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் இருவர் விலகியுள்ளனர்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான ருவான் பெர்னாண்டோ மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோரே விசாரணையில் இருந்து விலகியுள்ளனர்.
அத்துடன் புதிய நீதியரசர்கள் குழுவை பெயரிடவும் உத்தரவிட்டனர்.
இந்தநிலையில் அடுத்த விசாரணையை ஜனவரி 20ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.
ஊடகவியலாளர் சாமர சம்பத், நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த பட்டியலை வெளியிடுவதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து உத்தரவு பெற்றுள்ளார்,
எனினும் இதனை எதிர்த்து நாடாளுமன்றம், மேன்முறையீட்டை செய்துள்ளது.
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam