மக்கள் ஆணையினை நிறைவேற்றும் நடவடிக்கையே நீதியரசர்களின் கால எல்லை நீடிப்பு - ஆளும் தரப்பு பகிரங்கம்
மக்கள் ஆணையினை நிறைவேற்றுகின்ற ஒரு நடவடிக்கையே நீதியரசர்களின் கால எல்லை நீடிப்பு என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நீதியரசர்களின் காலநீடிப்பு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையிலேயே அதனை குறிப்பிட்டுள்ளார்.
மோசடிக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நீதியரசர்களின் இரண்டு ஆண்டுகால நீடிப்பு தொடர்பில் இன்று எதிர்கட்சிகள் குழப்பம் அடைந்துள்ளன.

கடந்த 76 ஆண்டுகளாக நாட்டினை குற்றச்செயல்கள் நிறைந்த நாடாக இவர்கள் மாற்றி இருக்கின்றார்கள். அதனால் தான் 40ஆயிரத்திற்கும் அதிகமான சிறைக்கைதிகள் இருக்கின்றார்கள்.
20 ஆயிரம் கைதிகள் இருக்கும் இடத்தில் 40 ஆயிரம் கைதிகள் காணப்படுகின்றார்கள்.
இலஞ்சஊழல் மோசடிக்கு எதிராக போதைப்பொருளுக்கு எதிராக இவ்வாறான குற்றச்செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் சட்டநடவடிக்கைகளும் வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன.
அவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றபோது அனுபவம் உள்ள நீதியரர்கள், அதிகாரிகள், சட்டத்தரணிகள் தேவை. இவை அனைத்தினையும் கருத்தில் கொண்டுதான் இந்த கால எல்லை நீடிப்பிற்கான அனுமதியினை பெற்றுக் கொடுக்கின்றோம்.
இதில் எந்தவிதமான தனிப்பட்ட லாபங்கள் கிடையாது. நாட்டு மக்கள் ஊழல் மோசடிக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள் என்று ஆணை வழங்கியிருக்கின்றார்கள்.
குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுபவர்களாக
அந்த மக்கள் ஆணையினை நிறைவேற்றுகின்ற ஒரு நடவடிக்கையையே இந்த நீதியரசர்களின் கால எல்லை நீடிப்பு.
இது குறித்து தொடர்ந்து எதிர்கட்சிகள் அரசாங்கத்தின் மீது விமர்சனம் செய்து வருகின்றார்கள்.

இதனால் இந்த வழக்கு விசாரணைகள் இடம்பெறுகின்ற வேகத்தினை பார்க்கின்ற போது தங்கள் குடும்பமே உள்ளே சென்று கம்பி எண்ண வேண்டிய நிலை வரும் என்று அவர்களுக்கு தெரியும்.
இவர்கள் சிறைக்கு செல்கின்ற வரிசையினை பார்க்கின்றபோது கடந்த 26 ஆண்டுகளாக இந்த நாட்டினை நாசம் செய்து கொள்ளையடித்த ராஜபக்ச கும்பல் கூட்டாக சேர்ந்து ஆட்டம் காணுக்கின்ற நிலை இருக்கின்றது.
இந்த ராஜபக்சக்களுக்கு வால்பிடிக்கின்றவர்களை தேடிப்பாக்கின்றபொழுது எல்லாருமே இன்று குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படுபவர்களாக இருக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவை வாட்டும் வெப்பம்: 11 பகுதிகளில் வறட்சி அறிவிப்பு: 45 மில்லியன் மக்கள் பாதிப்பு News Lankasri