அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் இறை போராட்டம்
அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் நெய்விளக்கேற்றி இன்று (25.9.2026) இறைபோராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கேப்பாபுலவு மற்றும் வற்றாப்பளை மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டத்தில், அனோஜனை விடுதலை செய்ய வேண்டும் என கோரி கேப்பாபிலவு மற்றும் வற்றாப்பளை மக்கள் இறைவழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
மன்னிப்பு இல்லா மதம் இல்லை, விடுதலை செய், விடுதலை செய், அனோஜனை விடுதலை செய்”, உள்ளிட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
கோரிக்கை
அனோஜனின் விடுதலையை வலியுறுத்தியும், அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் மக்கள் தமது கோரிக்கைகளையும் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த போராட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் ஞானதாஸ் யூட்சன், சனசமூக நிலைய உறுப்பினர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் , சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


