ஊடகவியலாளர் சமுதிதவின் வீட்டின் மீது தாக்குதல்: வெளியானது சிசிடீவி காணொளி (VIDEO)
வீட்டில் தான் உறங்கிக் கொண்டிருந்த போது தாக்குதல் நடத்தப்படும் பெரும் சத்தம் கேட்டே விழித்தெழுந்ததாக ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஊடகவியலாளர் சமுதித இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த தாக்குதல் காரணமாக வீட்டின் பல ஜன்னல்கள் சேதமடைந்துள்ளன.
வீடு முழுவதும் மலத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் யாரையும் பெயரிட முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்த தாக்குதல் தொடர்பான சிசிடீவி காணொளிகள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
தொடர்புடைய செய்தி...
ஊடகவியலாளர் சமுதித்தவின் இல்லத்தின் மீது ஆயுதம் தாங்கிய குழுவொன்று தாக்குதல்