தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக போராட தயங்கமாட்டோம்! யாழிலிருந்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜயின் கச்சத்தீவு மீட்பு வாக்குறுதியை தேர்தல் கால வாக்குறுதியாக கலைந்து விட வேண்டும் இல்லையேல் உங்களுக்கு எதிராக போராட தயங்கமாட்டோம் என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சம்மேளனப் பிரதிநிதி செல்லதுரை நற்குணம் தெரிவித்துள்ளார்.
யாழில் உள்ள கடற் தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் நேற்று ( 19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் சொத்து கச்சத்தீவு
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய் அவர்களுக்கு யாழ்.மாவட்ட மீனவ மக்கள் சார்பில் நன்றியை கூறிக் கள்வதோடு சில விடயங்களை கோரிக்கையாக முன்வைக்க விரும்புகிறோம்.

கச்சத்தீவு இலங்கையின் சொத்து முறைப்படி இலங்கை அதனை பெற்றுக்கொண்டிருப்பது இந்திய மக்களுக்கு குறிப்பாக தமிழக கடற்தொழில் மக்களுக்கு நன்கு தெரியும்.
இவ்வாறான நிலையில் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது கச்சத்தீவை இந்தியா மீட்க வேண்டும் என பிரச்சாரத்தில் ஈடுபட்டீர்கள். நாங்கள் அதை பெரிய விடயமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் தமிழ் நாட்டில் இடம்பெறும் தேர்தல்களில் மீனவ மக்களின் வாக்குகளை பெறுவதற்கு வேட்பாளர்கள் இவ்வாறு பேசுவது தொடர் கதையாக இருந்த வருகிறது.
தாங்கள் தமிழ் நாட்டின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இனி கச்சத்தீவு தொடர்பில் உண்மைக்கு புறம்பான விடயங்களை பேசுவதை நாங்கள் விரும்பவில்லை. நீங்கள் கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுக்க நினைப்பீர்கள் ஆயின் யாழ். மாவட்ட மீனவ சமுதாயமாக நாங்கள் எமது பாரிய எதிர்ப்பினை காட்டுவதற்கு தயங்கமாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடல் வளம் அழிப்பு
குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட யாழ். மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சம்மேளன தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் நாட்டின் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்களுக்கு மீனவர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அவரிடம் வினையமாக சில விடயங்களை முன்வைக்க விரும்புகிறோம்.

தமிழ் நாட்டில் இருந்து எல்லை தாண்டும் இந்திய கடற்றொழிலாளர்களால் இலங்கை வடபகுதி கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எமது கடல் வளத்தை அழிப்பதோடு எமது கடற்றொழிலாளர்களின் பல கோடி பெருமதியான வலைகளையும் நாசம் செய்துவிட்டார்கள். தற்போது கடற்றொழில் தடைக்காலம் இடம்பெற்று கொண்டிருக்கின்ற நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் தடைகாலம் நிறைவடைவதாக அறிகிறோம்.
ஆகவே எமது கடற்பகுதிக்குள் அத்துமீறி உள்நுளையும் இந்திய கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.