இலங்கைக்கு கோவிட் தடுப்பூசிகளை வழங்க ஜோ பைடன் நிர்வாகம் உறுதி
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் இலங்கைக்கு கோவிட் தடுப்பூசிகளை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளது.
இந்த தடுப்பூசிகள், பைடன் நிர்வாகத்தால், ஆசிய பிராந்தியத்துக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 16 மில்லியன் குப்பிகளில் ஒரு பகுதியாக இருக்கும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அதன்படி, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், மாலைத்தீவு, பூட்டான், பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, லாவோஸ், பப்புவா நியூ கினியா, தைவான், கம்போடியா மற்றும் பசிபிக் ஆகிய நாடுகளுக்கு 16 மில்லியன் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
எனினும் இதில் இலங்கைக்கு கிடைக்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை இன்னும் தெரியவரவில்லை. அமெரிக்காவின் சொந்த தடுப்பூசி விநியோகத்தின் 80 மில்லியன் குப்பிகளில் 55 மில்லியனுக்கான விநியோக பட்டியலை பைடன் -ஹாரிஸ் நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது.
உலகளவில் தொற்றுநோயை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சேவையில் ஜூன் இறுதிக்குள் முழுமை ஒதுக்கீடு செய்வதாக ஜனாதிபதி பிடன் உறுதியளித்துள்ளார்.
இதேவேளை முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், பைடன் நிர்வாகம்
இலங்கைக்கான அளவுகளை உள்ளடக்கிய முதல் 25 மில்லியன் தடுப்பூசி அளவுகளுக்கான
திட்டத்தை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 15 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri