ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச்சூடு: பின்னணியில் உடந்தையாக செயற்பட்ட பெண் கைது
கொழும்பு - ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 14ஆம் திகதி கொழும்பு - ஜிந்துபிட்டி பகுதியில், துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொலை செய்து, மேலும் நால்வரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வு பணியகத்தினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
முச்சக்கர வண்டியின் சாரதி கைது
அதற்கமைய, நேற்று வெள்ளிக்கிழமை (27) முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் போது, கடவத்தை - சூரியபாலுவ பகுதியில் வைத்து ஆண் சந்தேகநபரும், வெல்லம்பிட்டிய - வெஹெரகொடெல்ல பகுதியில் வைத்து பெண் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த குற்றச் செயலின் பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் துப்பாக்கியுடன் தப்பிச்சென்ற முச்சக்கர வண்டியின் சாரதியே இந்த சந்தேகநபர் என்பதும், சந்தேகநபரான பெண் அவருக்கு துணையாக இருந்துள்ளார் என்பதும் மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபர் சேதவத்தை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் எனவும், சந்தேகநபரான பெண் வெஹெரகொடெல்ல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கரையோர பொலிஸார் விசாரணை
கொழும்பு வடக்கு பிரிவு குற்றத் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் குழுவொன்றினால், 06 கிராம் 540 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் சந்தேகநபரையும், 03 கிராம் 100 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் சந்தேகநபரான பெண்ணையும் கைது செய்து கரையோர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை 07 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கரையோர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
பிக் பாஸ் திவாகரை கம்பியால் தாக்கினாரா மா கா பா? நடிகையிடம் வாட்டர் மெலன் ஸ்டார் சர்ச்சை பேச்சு Manithan
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri