சுரேஷ் சலே கைதால் வெளிவந்த முக்கிய தகவல்கள் - வேகமடையும் விசாரணைகள்
புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டதன் மூலம், அம்பலப்படுத்தப்பட்ட பல முக்கிய தகவல்கள் குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நீண்ட காலமாக புலனாய்வாளர்களால் நடத்தப்பட்ட விசாரணைகள் மூலம் இந்த முக்கியமான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் முறையாக முன்னெடுக்கப்பட்டன.
பல ஆவணங்கள்
மேலும் 2019 - 2024ஆம் ஆண்டு காலகட்டத்தில் தொலைந்து போன பல ஆவணங்கள் பின்னர் மீட்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், இந்த விசாரணைகளில் வெளிப்படுத்தப்படும் உண்மைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் மேலும் பல முக்கியமான கைதுகள் செய்யப்படும் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.