சுவிற்சர்லாந்தில் ஈழத்தமிழர் சமைக்கும் யூத உணவு (Photos)

Switzerland Israel World
By Diasa Oct 20, 2023 06:00 PM GMT
Report

சுவிற்சர்லாந்தில் தர்மலிங்கம் சசிக்குமார் எனும் ஈழத்தமிழர் ஒருவர் யூதர்களின் உணவுகளை சமைத்து புகழ்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சைவநெறிக்கூடத்தின் நிறுவனர்களில் ஒருவரும், ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் தமிழ் அருட்சுனையர்களில் ஒருவரும், பல்சமய இல்லத்தின் பயிலரங்கு மற்றும் உள்ளப்பணியாளராகவும், சுவிற்சர்லாந்தில் 700 ஆண்டுகள் கடந்த பின்னர் பேர்ன் பல்கலைக்கழகத்தில் சமய ஆற்றுப்படுத்தலை முழுமையான பட்டயக்கல்வியாக நிறைவு செய்தவரும், செவ்வாய் முதல் வெள்ளி வரை பேர்ன் பல்சமய இல்லத்திற்காக புலால் அற்ற ஆயுர்வே சமையல் உணவமான வணக்கம் உணவகத்தின் முகாமையாளரும் சமையல் திறவோனாக சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் விளங்குகின்றார்.

ஐரோப்பா நாட்டில் தமிழ் வழிபாட்டினை முதன்மைப்படுத்தி சைவத் தமிழை பரப்பி ஒழுகும் சைவநெறிக்கூடத்தின் பயிணினை தொண்டாக ஆற்றிவரும் இவர், தனது வாழ்க்கை தொழிலாக புலால் அற்ற சமையலைத் தெரிவுசெய்துகொண்டு பன்னாட்டவர்களும் தமிழ் உணவை விரும்பி உண்ண பேர்ன் தலை நகரில் வழிசெய்துள்ளார்.

இந்த உணவகத்தில் சமைக்கப்படும் உணவு புலால் அற்றது மட்டுமல்ல, யூத சமயத்தவர்கள் உண்ணக்கூடியது என்று பேர்ன் நகர யூதர்கள் பேராயத்தால் சான்றுவழங்கப்பட்ட உணவகமாகவும் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விடுதலைப் புலிகளைக் காட்டிக்கொடுத்தே பிள்ளையான் பிழைத்தார் : இராணுவப் புலனாய்வு அதிகாரி தகவல்

விடுதலைப் புலிகளைக் காட்டிக்கொடுத்தே பிள்ளையான் பிழைத்தார் : இராணுவப் புலனாய்வு அதிகாரி தகவல்


கொஷ்சர் (திருவிளங்கும் உணவு) என யூதர்களால் அழைக்கப்படும் உணவு தயாரிப்பதற்கு என்று பல நெறிகள் உண்டு, ஒரு ஈழத்தமிழர், சைவசமயக்குரு, புலால் அற்று ஆயுள்வேதமாக தயாரிக்கும் உணவு எப்படி திருவுணவானது என்பதற்கு முன்னோட்டக்கதை ஒன்று உண்டு.

சுவிற்சர்லாந்தில் ஈழத்தமிழர் சமைக்கும் யூத உணவு (Photos) | Jewish Food Cooked By Srilankan In Switzerland

ஒருமுறை வணக்கம் உணவகத்திற்கு வந்த ஒரு வெளிநாட்டவர், வணக்கம் உணவகத்தின் சமையலறையைச் சுற்றிப் பார்த்தார், குளிர்சாதனப்பெட்டியைத் திறந்து பார்த்தார், பாத்திரங்களிலிருந்து பொருட்களை உற்று நோக்கினார். இவர் உணவு ஆய்வாளராக இருக்கூடுமோ? என சசிக்குமார் எண்ணியுள்ளார்.

அப்போது தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்: மைக்கேல் கோன். பேர்ன் யூத சமூகத்தின் உதவி ரபி. (சமயக்குருவாக) புதிதாக பணிக்கு வந்துள்ளேன். எனக்கு உங்கள் ஆயுர்வேத உணவு வகைகளில் மிகுந்த விருப்பம். ஒரு ரப்பியாக (யூதுசமயக்குருவாக) மற்றும் "நவீன ஆர்த்தடாக்ஸ்" யூதராக, நாங்கள் பன்றி இறைச்சியைத் தவிர்ப்பதைத் தாண்டி, மேலும் உணவுச் சட்டங்களைக் கடைப்பிடிக்கின்றோம். உணவுத் தட்டில் உள்ள அனைத்தும் யூதர்களுக்கு அனுமதிக்கப்பட்ட திருவுணவாக (கோஷராக) இருக்க வேண்டும். ஆயுர்வேத உணவு கோஷராக இருக்க முடியுமா? இவ்வாறு மைக்கல் தனது கேள்விகளுடன் சசிக்குமார் அறிமுகமானார்.

திவுலபத்தான விவகாரத்தில் யாரும் தலையிட வேண்டாம்: சாணக்கியனை எச்சரித்த சரத் வீரசேகர

திவுலபத்தான விவகாரத்தில் யாரும் தலையிட வேண்டாம்: சாணக்கியனை எச்சரித்த சரத் வீரசேகர


அருளமுது படைக்கும் பணி

சசிக்குமார் (சைவசமயக்குரு), திரு கைகல் (யூதசமயக்குருவின்) பொதுவான நிலையைக் கண்டறிந்தனர்: இரண்டு சமையலறைகளிலும் தூய்மை முக்கிய பங்கு வகிக்கிறது. கோஷர் உணவுகளில் "பால்" மற்றும் "மாமிசம்" ஆகியவற்றுக்கு இடையே வேறுபாடு உள்ளது! யூதசமய நெறியின்படி "நீங்கள் ஒரு குழந்தையை அதன் தாயின் பாலில் கொதிக்க வைக்கக்கூடாது." என்றார் மைக்கல், சசிக்குமார் தொடரும்போது, எனது சமையலறையில் இறைச்சி உணவுகள் சமைக்கப்படாது, நான் இங்கு சமையல் செய்தாலும், சமய ஆற்றுப்படுத்தல், பல்பண்பாட்டு ஊடாட்டர், முரண்களுக்கு தீர்வுகாணும் பணி, ஞானலிங்கேச்சுரர் கோவிலில் வழிபாடு முதல் அருளமுது படைக்கும் பணி என பன்முகம் கொண்டது என விளக்கினார்.

சுவிற்சர்லாந்தில் ஈழத்தமிழர் சமைக்கும் யூத உணவு (Photos) | Jewish Food Cooked By Srilankan In Switzerland

யூத சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு பொது இடத்தில் திருவுணவு (கோஷர்) சாப்பிட்டால் நன்றாக இருக்கும்" என்று கோன் கூறினார். சைவக்குருவானவரும், யூதக்குருவானவரும் தொடர்ந்து பலமுறை நேர்கண்டுகொண்டனர். நிறைவில் தனது புலால் அற்ற ஆயுர்வேத சமையலை யூதர்களும் உண்ணத்தக்க வகையில் திருவுணவாக்க சசிக்குமார் அவர்கள் இணங்கினார்.

மைக்கல் கோன் அனைத்து தயாரிப்புகளையும் சரிபார்த்து, உற்பத்தியாளர்கள் கோஷர் விதிமுறைகளின்படி வேலை செய்கிறார்களா என்பதை அவரது உலகளாவிய ரபிஸ் நெட்வொர்க் மூலம் தெளிவுபடுத்தி நிரலை சசிக்குமார் அவர்களிடம் அளித்தார். பேர்ன் யூதப்பேராயத்திடம் சைவக்குருவான சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் அவர்கள் சமைக்கும் உணவு திருவுணவு (கோஷர்) என சான்றும் பெற்றுக்கொடுத்தார் மைக்கல்.

விடுதலைப் புலிகளிடமிருந்து கருணாவை நாம் பிரிக்கவில்லை: முன்னாள் புலனாய்வு அதிகாரி அம்பலப்படுத்தும் விடயம்

விடுதலைப் புலிகளிடமிருந்து கருணாவை நாம் பிரிக்கவில்லை: முன்னாள் புலனாய்வு அதிகாரி அம்பலப்படுத்தும் விடயம்


வயிற்றை நிரப்புவதல்ல உணவு, வாழ்நாளை நலத்துடன் நீடிக்க அடிப்படை உணவாகும், தமிழர் உணவுப்பழக்கம் பண்டைய காலத்தில் உடலுக்கும் உள்ளத்திற்கும் நலன் அளித்தது என மொழிந்தார் சிவருசி சசிக்குமார். எல்லாவற்றையும் ஊடுருவிச் செல்லும் ஒரு ஒட்டுமொத்த ஆற்றல் இதுவே கடவுள் என நாம் நம்புகின்றோம், ஏகத்துவவாதி மற்றும் பலதெய்வவாதி வேறுபாடுகளும், ஏனைய ஏற்றத்தாழ்வுகளும் மாந்தர் உயிர்மெய் அன்புக்கு முன்னால் ஏதுமற்றதாகிவிடும்.

2023 நடுப்பகுதியில் மைக்கல் புதிய குருப்பணி ஆணை ஏற்று நோர்வே நாட்டிற்கு மாற்றலாகிச் செல்கின்றார். 19.10.2023 புதிய யூத சமய்குரு புதுப்பணி ஏற்கின்றார். இவரும் பல்சமய இல்லத்தில் திருவுணவு முறைமை தொடர வேண்டியுள்ளார்.


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US