நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இன்றைய தினம் (26.05.2023) தாக்கல் செய்யப்பட்ட மனுவில், குற்றப் புலனாய்வு திணைக்களம் தன்மை கைது செய்வதைத் தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், அதன் பணிப்பாளர் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையத் தளபதி ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
விசாரணைக்குட்படுத்த நடவடிக்கை
பிரதிவாதிகள் தன்னை சட்டவிரோதமாகக் கைது செய்யத் தயாராகி வருவதாக மனுதாரர் ஜெரோம் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும், தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறும், அவர்களைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிரதிவாதிகளுக்கு வழங்குமாறும் கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, அவரை விசாரணைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, அவர் நாட்டிலிருந்து வெளியேறியிருந்தார். அவர் இலங்கையில் இருந்து வெளியேறியதன் பின்னர் அவருக்கு வெளிநாடு செல்வதற்கான தடை விதிக்கப்பட்டிருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
