சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் இன்னும் நாடு திரும்பவில்லை! பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
மதம் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்றையதினம்(21.05.2023) நாட்டுக்கு வருவதாக அறிவித்திருந்த நிலையில் அவர் இதுவரையில் நாட்டை வந்தடையவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் கட்டுநாயக்கவில் உள்ள அவரது ஆலயமான மிராக்கிள் டோம் மண்டபத்திற்கு முன்னதாக பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு பல தரப்பினரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இன்று நாடு திரும்புவாரா ஜெரோம்..?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில், விசாரணையும் நடைபெற்று வருகிறது. அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே தடை உத்தரவைப் பெற்றுள்ளனர்.
இவ்வாறானதொரு சூழலில் ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ நாட்டை விட்டு வெளியேறியதாகவும், ஞாயிற்றுக்கிழமை, அதாவது இன்று இலங்கை திரும்புவதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.