புதுடெல்லியில் நடைபெறும் மாநாட்டிற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் விஜயம்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணமொன்றை இன்று (01.03.2023) மேற்கொள்ளவுள்ளார்.
பூகோள காலநிலை, பொருளாதாரம் தொடர்பில் இந்தியாவின் புது டெல்லியில் நாளை (02.03.2023) நடைபெறவுள்ள (Raisina Dialogue) மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் இந்தியா செல்லவுள்ளார்.

விசேட கலந்துரையாடல்
இந்த மாநாட்டை தவிர மார்ச் 03 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள விசேட கலந்துரையாடல் ஒன்றிலும் அமைச்சர் கலந்து கொள்ளவுள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் 04 ஆம் திகதி வரை அமைச்சர் இந்தியாவில் தங்கவுள்ளார்.
இந்த இலங்கை குழுவுக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமை தாங்குகின்றார். மார்ச் 2 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரை குறித்த மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan