75 அடி பள்ளத்தில் விழுந்த ஜீப் - 10 பேர் படுகாயம்
பொலேரோ ரக ஜீப் ஒன்று 75 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து கம்பளை - நெட்டாபிட்டிய பிரதேசத்தில் இன்று (1.4.2024) அதிகாலை நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவத்தில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சாரதி தூங்கியதால் விபத்து
பதினைந்து பேரை ஏற்றிச் சென்ற பொலேரோ ரக ஜீப் ஒன்று பண்டாரவளையில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்த போது கம்பளை நெட்டாபிட்டிய பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி சுமார் 75 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளை பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு இரவு வீடு திரும்பிய குழுவினர் இன்று அதிகாலை நான்கு மணியளவில் இந்த விபத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.
மூன்று நாட்களாக இறுதி ஊர்வலத்தில் இருந்த இந்தக் குழுவினர், வேலைக்குச் செல்லும் நோக்கில் கிராமங்களுக்குச் சென்று வருகின்றனர்.
சாரதி தூங்கியதால் விபத்து நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குழந்தைகள் உட்பட ஆறு பெண்களும் ஒன்பது ஆண்களும் இங்கு பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 4 மணி நேரம் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
