ஜனாதிபதி தேர்தல் திகதி குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தல் குறித்து எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் அக்டோபர் 17ஆம் திகதிக்குமிடையில் தேர்தல் இடம்பெறக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
குறித்த தகவல்களை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்டமே நடைமுறை
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“தற்போதைய தேர்தல் சட்டமே தேர்தல் நடைமுறையை நிர்வகிக்கும் அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு 2024ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படும்.
வாக்காளர்களைப் பதிவு செய்யும் பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஜூலை மாதத்துக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான செலவு 10 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 12 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
