மோட்டார் வாகன விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு
எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 14 வயது பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் பரகஹதெனிய புஸ்வெல்ல வீதியில் இடம்பெற்றுள்ளது.
சிங்கபுர பரகஹதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக சிகிச்சை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

பரகஹதெனிய புஸ்வெல்ல வீதியில் சிங்கபுர பிரதேசத்தில் பரகஹதெனியவில் இருந்து புஸ்ஸல்லாவை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இரு மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்களையும் பின்னால் சென்றவர்களையும் மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் பாடசாலை மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த ஏனையோர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
வெளியில் சாப்பிட நீ எதுக்கு இருக்க, மீனாவிடம் செந்தில் கேட்ட கேள்வி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam