ஐ.சி.சி தலைவராக பொறுப்பேற்ற ஜெய் சா
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய் சா, ஐசிசி என்ற சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
அவர் 2020ஆம் ஆண்டு முதல் ஐசிசி தலைவர் பதவியில் இருந்த கிரேக் பாக்லேயின் இடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் ஐசிசி தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன், மேலும் ஐசிசி இயக்குநர்கள் மற்றும் உறுப்பினர் சபைகளின் ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்று சா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வகித்த பதவிகள்
கிரிக்கெட் நிர்வாகத்தில் சாவின் பயணம் 2009இல் குஜராத் கிரிக்கெட் சங்கத்துடன் ஆரம்பித்தது.
2019ஆம் ஆண்டில், அவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் மிகவும் இளவயது செயலாளராக பதவியேற்றார்.
மேலும், அவர் ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவராகவும், ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகாரக் குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்தநிலையில், 2028 - லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் சேர்ப்பது உட்பட விளையாட்டின் உலகளாவிய கிரிக்கெட் தடத்தை விரிவுபடுத்த சா இந்த அனுபவத்தைப் பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |