இலங்கைக்கு உதவிகளை வழங்க முடியாது என்ற செய்திக்கு ஜப்பானிய தூதரகம் மறுப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால் மாத்திரமே ஜப்பான் இலங்கைக்கு உதவிகளை வழங்கும் என்று வௌியாகும் செய்திகள் போலியானது என ஜப்பான் தூதுவர் ஹிடேக்கி மிசுகோஷி (Hideaki Mizukoshi) தெரிவித்துள்ளார்.
செய்தி மறுப்பு

இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவிகள் பொறுப்பற்ற நிர்வாகத்தால் வீணடிக்கப்படலாம் என்பதால், இலங்கைக்கு நிதி உதவி வழங்கப்படமாட்டாது.
எனினும் இலங்கைக்கு உதவி வழங்குவது குறித்து ஜப்பான் பின்னர் பரிசீலிக்கும் என ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி நேற்று (01) தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடைபெற்ற சந்திப்பில் தெரிவித்திருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.
இலங்கையும் ஜப்பானும்

இதனையடுத்து அவ்வாறான கருத்து எதனையும் ஜப்பானிய தூதுவர் குறித்த சந்திப்பில் வெளியிடவில்லை என்று ஜப்பானிய தூதரகம் பிரதமர் அலுவலகத்துக்கு அறிவித்துள்ளது.
மேலும் இலங்கையும் ஜப்பானும் நெருங்கிய நட்பு நாடுகள் என்றும் ஜப்பான் தூதரகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி
| ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையில்லை:உதவிகளை வழங்க முடியாது:ஜப்பான் |
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam