ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையில்லை:உதவிகளை வழங்க முடியாது:ஜப்பான்
இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்ற போதிலும் இந்த சந்தர்ப்பத்தில் நிதியுதவிகளை வழங்குவது சம்பந்தமாக ஆராய்ந்து பார்க்க முடியாது என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிதேகியை நேற்று சந்தித்து, இலங்கை எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான நிலைமை சம்பந்தமாக கலந்துரையாடியுள்ளனர்.
உதவிகளை வழங்குவது பற்றி பின்னர் ஆராயலாம்

ஜப்பான் உதவிகளை வழங்கினாலும் அவை சரியான முறையில் முகாமைத்துவம் செய்யப்படுமா என்பதை எதிர்பார்க்க முடியாது எனவும் இலங்கையின் ஆட்சியாளர்கள் தொடர்பில் நம்பிக்கை உருவாகும் வரை உதவிகள் வழங்குவதை தாமதிக்க நேரிடும் எனவும் ஜப்பான் தூதுவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் உதவிகளை வழங்குவது சம்பந்தமாக பின்னர் ஆராய்ந்து பார்க்க முடியும் எனவும் ஜப்பான் தூதுவர் தெரிவித்துள்ளார்.
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri