இலங்கைக்கான உதவிகளை குறைத்தது ஜப்பான்? - செய்திகளின் தொகுப்பு (Video)
இலங்கைக்கான உதவிகளை ஜப்பானிய அரசாங்கம் குறைத்துக் கொண்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2020ம் ஆண்டில் இலங்கைக்காக ஜப்பான் வழங்கிய மொத்த உதவிகள் 94 வீதத்தினால் குறைவடைந்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டில் 42.7 பில்லியன் உதவி வழங்கிய ஜப்பான் அரசாங்கம் 2020ம் ஆண்டில் இந்த தொகையை 1.4 பில்லியன்களாக குறைத்துக் கொண்டுள்ளது.
ஜப்பானின் உதவியுடன் நிர்மானிக்கப்படவிருந்த இலகு புகையிரத திட்டத்தை தற்போதைய அரசாங்கம் ரத்து செய்ததைத் தொடர்ந்து இவ்வாறு உதவிகள் குறைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றை மதிய நேர செய்திகளின் தொகுப்பு,